Posts

Showing posts from May, 2022

பொற்கைப் பாண்டியன்..!

Image
பொற்கைப் பாண்டியன்..! பாண்டிய மன்னன் பொற்கை பெற்ற வரலாறு..! ★ பழமொழி நானூறு பாடல் ஒன்று பொற்கைப் பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. 102. ★ மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது அதை உற்று நோக்குகிறான். ★ பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். ★  வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான்.  ★இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான்.  ★ அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எ

பாண்டிய மதிவாணன்னின் தமிழ் பற்று..!

Image
  மதிவாணன்..! ◆ மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய  மதிவாணன்னின் தமிழ் பற்று..! ◆  மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான்.  ◆ முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். மதிவாணர் நாடகத் தமிழ் ◆  நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான்.  ◆ மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ◆  நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் பெருவழுதி

Image
வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்  பெருவழுதி ★ பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ★ இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். ★ இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார். ★  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன் “தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே! இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்! இன்றே போல் நும்புணர்ச்சி” — (புறம் - 58) பாடப்பட்டுள்ளான்.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்..!

Image
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்..! ★ இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த மன்னனாவான். ★ இவர் இலவந்திகைப் பள்ளியில் இறந்ததால் நன்மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் என்றும் வழங்கப்பட்டான்.  ★ இவனைப் பாடிய புலவர்கள் மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன்பேரி சாத்தனார் ஆவர். ★ "நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!" எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர். மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து "நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்

நல்வழுதி

Image
நல்வழுதி ★ நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப்  பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில் ★ "தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ★ இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

உக்கிரப் பெருவழுதி பாண்டியன்..!

Image
உக்கிரப் பெருவழுதி  பாண்டியன்..! ★ பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். வெற்றி ★ ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார். ★ கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன்.  ★ இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உறிஞ்சிக் கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக் கொண்டானாம். நட்பு ★ இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான்.  ★ இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். கடைச்சங்க காலக் கடைசி அரசன் : ★ இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான். சினப்போர் வழுதி ★ வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர்  வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர். ★ அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:

கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..!

Image
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..! ★ கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ★ வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.  அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3 வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21 வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52, வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64, ★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம்.  ★ கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம். ★ பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம். ★ குறுவழுதியின் மகனே இம்மன்னன்

பூதப்பாண்டியன்

Image
பூதப்பாண்டியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் : ★ பூதப்பாண்டியன் என்பவன் சங்க கால த்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன்.  ★ இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது. ★  இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழி கொண்டவன்.  ★ இவனுடைய மனைவி கோப்பெருங்கோப்பெண்டு என்னும் நல்லாள் , இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங் கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. ★ இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர். புறநானூறு (246-247) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் : ★ பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு . (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர்.பூதப்பாண்டியன் அதனை போரிட்டு வென்றான். ஆகவே "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் " எனும் பெயரினை பெற்றான்.  ★ இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் "பூதப்பாண்டி" எனும் பெயரில் ஊர் உள்ளது.  ★ இத்தகைய சிறப்புள்ள  இம்மன்னன் ஒருநாள் இறக்கிறான். இவனது மனைவி பெருங்கோப்பெண்ட

பாண்டிய மன்னர்களின் பட்டியல்..!

பாண்டிய மன்னர்களின் பட்டியல்..! முற்காலப் பாண்டியர்கள் ★ வடிம்பலம்ப நின்ற  பாண்டியன் ★  நிலந்தரு திருவிற் பாண்டியன் ★ முதுகுடுமிப்பெருவழுதி ★  பெரும்பெயர் வழுதி கடைச்சங்க காலப் பாண்டியரகள்..! ★ முடத்திருமாறன் ★ பசும்பூண் பாண்டியன் ★ இளம் பெருவழுதி ★ பூதப் பாண்டியன் ★ கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ★ ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ★ உக்கிரப் பெருவழுதி ★ நல்வழுதி ★ இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ★ தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ★ வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ★ நம்பி நெடுஞ்செழியன் ★ மதிவாணன் ★ பொற்கைப்பாண்டியன் ★ அறிவுடை நம்பி ★ வெற்றிவேற் செழியன் ★ மாறன் வழுதி ★ குறுவழுதி இடைக்காலப் பாண்டியர்கள் ★ கடுங்கோன் ( கி.பி. 575-600) ★ அவனி சூளாமணி ( கி.பி. 600-625) ★ செழியன் சேந்தன் ( கி.பி. 625-640) ★ அரிகேசரி ( கி.பி. 640-670) ★ ரணதீரன் ( கி.பி. 670-710) ★ பராங்குசன் ( கி.பி. 710-765) ★ பராந்தகன் ( கி.பி. 765-790) ★ இரண்டாம் இராசசிம்மன் ( கி.பி. 790-792) ★ வரகுணன் ( கி.பி. 792-835) ★ சீவல்லபன் ( கி.பி. 835-862) ★ வரகுண வர்மன் (

இளம் பெருவழுதி..!

Image
இளம் பெருவழுதி..! ★ இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்ந்திருக்க வேண்டும். ★  இவனை "கடலுள் மாய்ந்த" என்னும் அடைமொழியுடன் அழைப்பர்.  ★ இவன் தனக்கென வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ★  இவன் திருமாலிடம் பேரன்புடையவனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. ★  இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் திகழ்ந்தான்.  ★ இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன. ★ புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் வேறு, பரிபாடல் நூலிலுள்ள பாடலைப் பாடியவர் வேறு என்பது அறிஞர்கள் கருத்து.  ★ பாடலின் பொருளமைதியே இதற்குக் காரணம். புறநானூறு 182 பாடல் "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கு என முயலா நோன் தாள் பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே." பாடல் தரும் செய்தி : இந்திரர் அமிழ்தம் = தேவாமிர்தம், சா

பசும்பூண் பாண்டியன்..!

Image
பசும்பூண் பாண்டியன்..! ★ பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன். ★ பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று.  ★ பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது. பசும்பூண் பாண்டியன் யார் ★ தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. ★ பசும்பூண் பாண்டியன்   ★ பசும்பூண் செழியன்  என்னும் தொடர்களை ஒப்புநோக்கி இவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே எனத் தெளியலாம்.

முடத்திருமாறன்.!

Image
முற்காலப் பாண்டியர்கள் முடத்திருமாறன்.! ★ முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்கு முன் வாழ்ந்தவன்.  ★ இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.  ★ கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.  ★ இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன.  ★ ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை. குறிப்பு கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன். இவனது பாடல்கள் சொல்லும் செய்தி நற்றிணை 105 இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான். குட்டுவன் குடவரை குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை. பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைந

பெரும்பெயர் வழுதி..!

Image
  பெரும்பெயர் வழுதி..! ★ பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ★  இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார். ★  ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். ★  புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது. ★ மருந்தில் கூற்றம் என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம்.  ★ இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. புலவர் இவனுக்கு இரண்டு அறிவுரைகள் கூறுகிறார். 1. ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே. 2. நாடி வரும் புலவர்களின் குறிப்பறிந்து அவர்களின் வறுமையைப் போக்குவது உன் கடமை.

நிலந்தரு திருவிற் பாண்டியன்..!

Image
நிலந்தரு திருவிற் பாண்டியன்..! BZ.Kings History நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.   தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’  எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன்  ‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன்  இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும். ★ நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. நாலாம் நூற்றாண்டு அளவிலோ அதற்கு முன்னோ) ★ நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன். “ நிலந்தந்த பேருதவிப்" "பொலந்தார் மார்பின்" "நெடியோன் உம்பல் ” — (60-61) என  மதுரைக் காஞ்சியில்  குறிப்பிடப்பட்டுள்ளது★   தலைச்சங்க  காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

சேர மன்னர்களின் வரலாறு..!

சேர மன்னர்களின் வரலாறு..! சங்ககாலச் சேரர் ஆட்சி சேர மன்னர்களின்  வரலாறு:  ★ தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது.  ★ சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர்.  ★  சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர்.  ★  இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. ★ கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது.  ★ நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர்.  ★ சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம். ★ சேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் 'சேரமான்' என்னும் அடைமொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படு கின்றனர்.  ★  எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக 'சேரமான்' என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ★ ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப்பெயர்களின் பெயர்வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்..!

Image
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்..! ★ வடிம்பலம்ப நின்ற பாண்டியன்   என்னும் அரசன்   சங்ககாலத்துக்கு   முன் ஆண்ட அரசன்.  ★ இவனை   நெடியோன்   எனவும் அழைப்பர். ★ பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.  ★ 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பிய த்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  ★ கடற்கோளால்  கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. ★ மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை . இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே  பஃறுளி ஆறு  என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது.  ★ இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான்.  ★ அதனால் இந்த விழா  முந்நீர் விழா  எனப்பட்டது. காவிரி யாற்றுக் கழிமுகத்தில் புகார்  நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச்  சிலப்பதிகாரம்  குறிப்பிடுகிறது. வடிம்பு, சொல்விளக்கம் ★ வடிம்பு என்பது உள்ளங்கால்,  உள்ளங்கை  முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளைய