வடிம்பலம்ப நின்ற பாண்டியன்..!
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்..!
★ வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன்.
★ இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.
★ பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.
★ 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.
★கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.
★ மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது.
★ இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான்.
★ அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.காவிரி யாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
வடிம்பு, சொல்விளக்கம்
Comments
Post a Comment