பாண்டிய மதிவாணன்னின் தமிழ் பற்று..!

 மதிவாணன்..!

◆ மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.



பாண்டிய மதிவாணன்னின் தமிழ் பற்று..!

◆  மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். 

◆ முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான்.


மதிவாணர் நாடகத் தமிழ்

◆  நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். 

◆ மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

◆  நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.


Comments

Popular posts from this blog

பாண்டிய மன்னர்களின் பட்டியல்..!

தமிழ் மன்னர்களின் பட்டியல்..! List of Tamil kings in Tamil

முடத்திருமாறன்.!