வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் பெருவழுதி

வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் பெருவழுதி



★ பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.

★ இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார்.

★ இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார்.

★  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன்


“தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே!

இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்!

இன்றே போல் நும்புணர்ச்சி”

— (புறம் - 58)

பாடப்பட்டுள்ளான்.

Comments

Popular posts from this blog

பாண்டிய மன்னர்களின் பட்டியல்..!

தமிழ் மன்னர்களின் பட்டியல்..! List of Tamil kings in Tamil

முடத்திருமாறன்.!