உக்கிரப் பெருவழுதி பாண்டியன்..!
உக்கிரப் பெருவழுதி பாண்டியன்..!
★ பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
வெற்றி
★ ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
★ கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன்.
★ இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உறிஞ்சிக் கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக் கொண்டானாம்.
நட்பு
★ இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான்.
★ இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
கடைச்சங்க காலக் கடைசி அரசன் :
★ இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
சினப்போர் வழுதி
★ வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர் வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர்.
★ அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:
வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
கருத்துகள்
★ உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.
★ படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத் தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன்.
★ எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கைமார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன்.
★ ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர்.
★ அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:
“வாழச்செய்த நல்வினை அல்லது
ஆழுங்காலை புணை பிறிதில்லை”
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
“நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும், இவண்வரைந்த வைகல்,
வாழச்செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்;
யான்அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்துசமந் தோன்றிப் பொலிக,நும் நாளே ”
★ இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது என்று செவிவழிமரபு. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன.
Comments
Post a Comment