நிலந்தரு திருவிற் பாண்டியன்..!
நிலந்தரு திருவிற் பாண்டியன்..!
BZ.Kings History
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன்
‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன்
இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும்.
★ நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. நாலாம் நூற்றாண்டு அளவிலோ அதற்கு முன்னோ)
★ நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன்.
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது★ தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
Comments
Post a Comment