நல்வழுதி
நல்வழுதி
★ நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப் பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில்
★ "தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
★ இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
Comments
Post a Comment