கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..!

கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..!



★ கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.

★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.

★ வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.


வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3

வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21

வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,

வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,

★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். 

★ கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம்.

★ பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம்.

★ குறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது.

★ வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.


★ "சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.

★ "வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!"

★ என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.


வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.

★ இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும்  தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும்  போற்றப்படுகின்றனர்.


கூடல் , மருங்கை , கொற்கை  ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.


வழுதி பல கோட்டைகளை வென்றவன். வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர்  தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன் புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான் 

★ வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன்  வாணன்  என்னும் வள்ளல்கள் வாழ்ந்து வந்தனர்.


வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் :

★ காய்சின வழுதி - முதற்சங்கத் தைக் கூட்டிய முதல்வன்.

★ பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.

★ மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி

★ பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

★ கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

★ பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி

★ பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி

★ பாண்டியன் மாறன் வழுதி

★ கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

★ கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

★ பெருவழுதி 

★ குறுவழுதி

★ நல்வழுதி

★ அண்டர்மகன் குறுவழுதியார் 


வழுதி - ஒப்புநோக்கு :

★ வழுதி என்னும் பெயர் அடைமொழியுடனும், அடைமொழி இல்லாமலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யாரைக் குறிக்கின்றன என்பத்தை நோக்குவது வரலாறு.


பெயர் பாடல் குறிப்பு

அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி நற்றிணை 150 -

பசும் பூண் வழுதி நற்றிணை 358 மருங்கூர் அரசன்

அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி அகநானூறு 93 கூடல் அரசன்

நல் தேர் வழுதி அகநானூறு 130 கொற்கை அரசன்

நல் தேர் வழுதி அகநானூறு 204 வெற்றிக்குப் பின்னர் பாசறையில் துன்பப்பட்டவன் [16]

ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி அகநானூறு 312 வேல் வீசி வென்றவன் [17]

பெரும் பெயர் வழுதி அகநானூறு 315 கூடல் அரசன்

கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி புறநானூறு 3 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி

சினப்போர் வழுதி புறநானூறு 51 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

இயல்தேர் வழுதி புறநானூறு 52 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

தகைமாண் வழுதி புறநானூறு 59 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.

அண்ணல் யானை வழுதி புறநானூறு 388 தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன்


Comments

Popular posts from this blog

தமிழ் மன்னர்களின் பட்டியல்..! List of Tamil kings in Tamil

நல்வழுதி

பாண்டியர் வரலாறு