Posts

பொற்கைப் பாண்டியன்..!

Image
பொற்கைப் பாண்டியன்..! பாண்டிய மன்னன் பொற்கை பெற்ற வரலாறு..! ★ பழமொழி நானூறு பாடல் ஒன்று பொற்கைப் பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. 102. ★ மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது அதை உற்று நோக்குகிறான். ★ பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். ★  வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான்.  ★இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான்.  ★ அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எ

பாண்டிய மதிவாணன்னின் தமிழ் பற்று..!

Image
  மதிவாணன்..! ◆ மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய  மதிவாணன்னின் தமிழ் பற்று..! ◆  மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான்.  ◆ முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். மதிவாணர் நாடகத் தமிழ் ◆  நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான்.  ◆ மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ◆  நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் பெருவழுதி

Image
வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்  பெருவழுதி ★ பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ★ இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். ★ இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார். ★  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன் “தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே! இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்! இன்றே போல் நும்புணர்ச்சி” — (புறம் - 58) பாடப்பட்டுள்ளான்.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்..!

Image
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்..! ★ இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த மன்னனாவான். ★ இவர் இலவந்திகைப் பள்ளியில் இறந்ததால் நன்மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் என்றும் வழங்கப்பட்டான்.  ★ இவனைப் பாடிய புலவர்கள் மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன்பேரி சாத்தனார் ஆவர். ★ "நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!" எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர். மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து "நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்

நல்வழுதி

Image
நல்வழுதி ★ நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப்  பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில் ★ "தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ★ இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

உக்கிரப் பெருவழுதி பாண்டியன்..!

Image
உக்கிரப் பெருவழுதி  பாண்டியன்..! ★ பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். வெற்றி ★ ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார். ★ கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன்.  ★ இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உறிஞ்சிக் கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக் கொண்டானாம். நட்பு ★ இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான்.  ★ இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். கடைச்சங்க காலக் கடைசி அரசன் : ★ இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான். சினப்போர் வழுதி ★ வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர்  வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர். ★ அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:

கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..!

Image
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி..! ★ கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ★ வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.  அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3 வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21 வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52, வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64, ★ பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம்.  ★ கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம். ★ பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம். ★ குறுவழுதியின் மகனே இம்மன்னன்